மஸ்கெலியா கார்ட்மோர் தமிழ் வித்தியாலயத்தில்
கார்ட்மோர் தோட்டத்தில் மலசலகூடத்திற்கான குழியை வெட்டுவதற்குப் பயனபடும் கொங்கிரீட் குழாய்களை பாடசாலை வளாகத்தில் இறக்கி வைத்துள்ளனர்.
இதன்போது சில மாணவர்கள் குறித்த கொங்கிரீட் குழாய்கள் மீது ஏறி விளையாடியபோது குழாய் ஒன்று மாணவர் ஒருவர் மீது சரிந்து விழுந்ததில் குறித்த மாணவர் படுகாயமடைந்துள்ளார்.
இதையடுத்து அந்த மாணவர் பாடசாலை ஆசிரியர்களால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் இடைநடுவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.