வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் மத்திய வங்கி உள்ளிட்ட நிறுவனங்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இதுவரை குறித்த விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் வாகன இறக்குமதிக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.