ஜப்பானின் வடக்கே இவாதே மற்றும் ஆமோரி மாகாணங்களில் இன்று(02) நள்ளிரவு 12.59 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி இருந்தது. இதனை ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கம் அந்த மாகாணங்களின் வடகடலோர பகுதியில் மையம் கொண்டிருந்தது.எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் அந்த பகுதியில் விடப்படவில்லை.