எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தப்பட வேண்டும் என்று மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளின் மேல் இடது மூலையில் பயணிகள் பார்க்கக் கூடிய வகையில் கட்டணத்தை காட்டும் மீட்டர் பொருத்துவது கட்டாயம் என்றும் அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும், பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டி சாரதிகள் கையடக்கத் தொலைபேசிகள் மூலம் கட்டணங்களை வசூலித்தால் அது தொடர்பான முறைப்பாடுகளை 0112860860 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கையடக்கத் தொலைபேசி (Mobile phone) மூலம் கட்டணம் வசூலிக்கும் முச்சக்கர வண்டி (Three Wheelers) சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.