அம்பாறை மாவட்ட நோன்பு பெருநாள் தொழுகை
பாறுக் ஷிஹான்
புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று நடைபெற்றது. இதன் போது மருதமுனை தாறுல் ஹுதா மகளிர் இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி எம்.எல்.எம்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார். இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
இதே வேளை அம்பாறை மாவட்டத்தின் நற்பிட்டிமுனை ,கல்முனை, சம்மாந்துறை ,நிந்தவூர், அக்கரைப்பற்று, பொத்துவில், உள்ளிட்ட முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் பெருநாள் தொழுகைகள் பரவலாக இடம்பெற்றன.
மேற்படி பகுதிகளில் இடம்பெற்ற பெருநாள் தொழுகைகளில் பல்லாயிரக்கணக்காகன மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இன்று நாடளாவிய ரீதியில் இஸ்லாமியர்கள் தமது புனித பெருநாள் தொழுகையினை நிறைவேற்றிய பின் அனைவரும் தமது பெருநாள் வாழ்த்துக்களை தமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொண்டனர் .
இதனை தொடர்ந்து தமது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளும் முகமாக உறவினர்கள் நண்பர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளுக்கு சென்று பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதோடு உணவு பண்டங்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .
பறஹகதெனிய ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்;டில் திடலில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை
பறகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹ்Pத் ஜும்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்ல் ஈத்துல் பித்ர் புனித நோன்புப் பெருநாள் தொழுகை அஸ்ஸலபிய்யா அரபுக் கல்லூரியின் விளையாட்டு மைதானத் திடலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் விசேட நோன்புப் பெருநாள் தொழுகையினையும் குத்பாப் பேருரையினையும் கலாநிதி அம்ஜத் ராசிக் அவர்கள் நடத்தி வைத்தார்கள்.
இத்தொழுகையில் ஊரிலுள்ள பெரு எண்ணிக்கையிலான ஆண் பெண் இரு சாரார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். (மாவத்தகம நிருபர்)
இக்பால் அலி
நூருல் ஹுதா உமர்
ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகையும் குத்பாப் பிரசங்கமும் புதன்கிழமை (10) மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரால் வழமைபோன்று இந் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
பெருநாள் தொழுகையும் குத்பாப் பிரசங்கமும் அந் நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் பேஷ் இமாம் அஷ்ஷெய்க் ஏ.எம்.எம். மின்ஹாஜ் (உஸ்மாணி) அவர்களால் நடத்தப்பட்டன.
நோன்புப் பெருநாள் தொழுகையில் மார்க்க அறிஞர்கள், ஊர் பிரமுகர்கள், ஊடகவியலாளா்கள், புத்திஜீவிகள், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.
முள்ளிப்பொத்தானையில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை
ஹஸ்பர்_
புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் இன்று (10)இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நோன்பு பெருநாள் திடல் தொழுகை முள்ளிப்பொத்தானை ஈச்சநகர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இதனை முள்ளிப்பொத்தானை புஹாரி ஜூம்மா பள்ளி நிர்வாகத்தினர ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த தொழுகையை உலமா சபையின் தம்பலகாமம் பிரதேச தலைவர் மௌலவி குசைன் மற்றும் மௌலவி முர்சித் ஆகியோர்கள் வழிநடாத்தினர்.சகோதரத்துவம் ஒற்றுமை போன்றன இதன் போது ஒவ்வொருவருக்குமிடையில் கைலாகு கொடுத்து முசாபகா செய்வதன் மூலம் வெளிப்படுத்தப்பட்ட
. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஆண்கள் என பலரும கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினார்கள்
மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நோன்பு பெருநாள் தொழுகை
(ஏ.எல்.எம்.ஷினாஸ், ஜெஸ்மி எம். மூஸா , றாசிக் நபாயிஸ்)
மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மையம், அக்பர் ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் பாக்கியத்துசாலிஹாத் பள்ளிவாசல் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை இன்று (10) மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் காலை 6:20 மணிக்கு நடைபெற்றது.
இம்முறை கடற்கரை திறந்தவெளியில் இமாம் ஜமாத்தாக நடைபெற்ற புனித நோன்புப் பெருநாள் தொழுகையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பெருநாள் தொழுகை மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற குத்பா பிரசங்கத்தையும் மௌலவி அஷ்ஷெய்க் கலாநிதி எம்.எல். முபாறக் (மதனி) நடாத்தினார்கள். ஆண்கள், பெண்களுக்கு வெவ்வேறாக இட வசதிகள் ஒதுக்கப்பட்டு தொழுகை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. பெருநாள் தொழுகையின்போது, பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரும் கடமையில் ஈடுபட்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
கல்முனை ஹுதா திடலில் புனித நோன்புப் பெருநாள் நபிவழித்திடல் தொழுகை.
(எஸ்.அஷ்ரப்கான்)
புனித நோன்புப் பெருநாள் நபிவழித் திடல் தொழுகை கல்முனை ஹுதா திடலில் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இங்கு பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் மெளலவி அஷ்ஷெய்க் எம்.எப்.எம்.ஜவ்ஸாத் (ஸலாமி) அவர்கள் நிகழ்த்தினார்.
ஆயிரக்கணக்கான மக்கள் நோன்புப் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டதுடன் பலஸ்தீன் ; காஸா மக்களுக்காக பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு
புனித ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு விசேட பெருநாள் தொழுகை மட்டக்களப்பு நகர ஜாமியூஸ் சலாம் ஜும்மா பள்ளிவாசலில் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.
(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)
ஜும்மா பள்ளிவாசலில் பேஷ் இமாம் மௌலவி எம் ஐ எம் நியாஸ் விசேட நோன்பு பெருநாள் தொழுகையை நடத்தி வைத்தார் இதன்போது நாட்டுக்கு நலன் வேண்டியும் சமூகங்களுக்கு இடையில் நல்லுறவு,காஸா மக்களின் ஈடேற்றம் வேண்டி விசேட துவா பிரார்த்தனை நடத்தப்பட்டது .
நகர அ ண்டிய கிராமங்களைச் சேர்ந்த பலர் இந்த விசேட தொழுகைவழிபாடுகளில் ஈடுபட்டனர்.
மன்னார்
புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் திடல் தொழுகையும் குத்பா பிரசங்கமும் மன்னார் மாவட்டத்தில் உள்ள சயீட் சிட்டி பொது மைதானத்தில் இன்று புதன்கிழமை (10) காலை 7 மணிக்கு நடைபெற்றன.
இதன்போது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஒரே நேரத்தில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகையும் குத்பா பிரசங்கமும் நடத்தப்பட்டது.
மன்னார் சயீட் சிட்டி பிரதம இமாம் எச்.என்.எம்.எம்.எஹியாகான் நோன்பு பெருநாள் தொழுகையையும் பிரசங்கத்தையும் நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து, ஏற்கனவே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
இதேவேளை மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றன.
அவற்றில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
அத்தோடு, நாடளாவிய ரீதியில் இஸ்லாமியர்கள் தமது புனித பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின்னர் தமது பெருநாள் வாழ்த்துக்களை தமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொண்டனர்.
பின்னர், இஸ்லாமியர்கள் தமது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளுக்குச் சென்று பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதோடு உணவுப் பண்டங்களை பகிர்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
வாழைச்சேனை, செம்மண்ணோடை
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை குபா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் புனித நோன்புப் பெருநாள் தொழுகை இன்று (10) காலை 6.30 மணிக்கு செம்மண்ணோடை அல் ஹம்ரா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டனர்.
இதன்போது ஒருவருக்கொருவர் கைலாகு கொடுத்து பெருநாள் வாழ்த்துக் கூறி தங்களது அன்பை பரிமாறிக்கொண்டனர்.
நோன்புப் பெருநாள் தொழுகையையும், குத்பா பிரசங்கத்தையும் வாழைச்சேனை மத்தி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தரும், மார்க்க அறிஞருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முகம்மத் காஸிமி நடத்தினார்.