உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் நாளை மறுதினம் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தச் சட்டமூலம் மற்றும் விஷம், அபின் மற்றும் அபாயகரமான போதைப்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழான உத்தரவுகளின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை நடைபெறவுள்ளது.