கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், பல வீதிகள் மூடப்படவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மத்தள, தனமல்வில, வெல்லவாய, உமா ஓயா ஆகிய பகுதிகளில் உள்ள பல வீதிகள் இன்று காலை 9:45 மணி முதல் 11 மணி வரை மூடப்படவுள்ளன.
அத்தோடு கட்டுநாயக்க - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை மற்றும் இரவு 9:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.