Our Feeds


Thursday, April 25, 2024

SHAHNI RAMEES

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் ஜப்பானிய உணவகம் திறந்துவைப்பு




 கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் அமைந்துள்ள

ஜப்பானிய உணவகமான 'நிஹொன்பஷி' உணவகம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது


 


கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நிறுவப்பட்ட "நிஹொன்பஷி" (Nihonbashi)ஜப்பானிய உணவகத்தை நேற்று (24) மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்துவைத்தார்.


 


1995 ஆம் ஆண்டு காலி முகத்திடல் டெரஸில் நிறுவப்பட்ட முதலாவது நிஹொன்பஷி ஜப்பானிய உணவகம், பிரபல சமையல் கலைஞரான தர்ஷன முனிதாஸவினால் நாட்டிற்கு அளிக்கப்பட்ட முன்னணி உணவகமாகும். கடந்த 29 ஆண்டுகளாக, இந்த உணவகம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சுவையான ஜப்பானிய உணவை ருசிக்கும் வாய்ப்பை வழங்கியது.


 


தற்போது இந்த உணவகம் காலிமுகத் திடல் நகர வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. உணவகத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்த ஜனாதிபதி,மேற்பார்வை சுற்றுப்பயணத்தை மேற்கொண்டதுடன், அங்கிருந்த பொதுமக்களுடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.


 


ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »