அரச பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி நடைபெற்ற பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டர்களுக்கான ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த நேர்முகத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி முதல் மே மாதம் 9 ஆம் திகதி வரை இசுருபாய கல்வி அமைச்சில் நடைபெறும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தகுதியானவர்களின் பெயர் பட்டியல் மற்றும் அழைப்புக் கடிதம் என்பன கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.