Our Feeds


Tuesday, April 9, 2024

Anonymous

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்து கூடுதல் கவனம்..!

 


 மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைக்கப்பெறுவதற்கு சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் தமது அதிகார எல்லைக்குட்பட்ட வகையில் அனைத்து அறிவித்தல்களையும் விடுத்துள்ளது. மேற்படி சம்மேளனத்தின் பிரதானிகள், அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் தெரிவித்துள்ளனர்.


சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான இயக்குநர் ஜொனி சிம்ப்சனிற்கும், இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானிற்கும் இடையிலான சந்திப்பு கொழும்பு அமைச்சில் நடைபெற்றது.


மேற்படி சந்திப்பின்போது முக்கிய பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்டு வரும் நகர்வுகள் பற்றி மேற்படி பிரதிநிதிகளிடம் ஜீவன் தொண்டமான் விளக்கமளித்தார். அத்துடன், இது விடயத்தில் உள்ள சவால்கள் பற்றியும் எடுத்துரைத்துள்ளார்.


இதற்கு பதிலளித்துள்ள சர்வதேச தொழிலாளர் சம்மேளன பிரதிநிதிகள், தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என அறிவிறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »