ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்த்து
வைப்பதற்காக நாளை (25) பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு டி.பி.ஜெயா மாவத்தையில் உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.இதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், ஆசன அமைப்பாளர்கள் ஆகியோர் இதில் கலந்துகொள்வார்கள் என அவர் தெரிவித்தார்.
கட்சி அலுவலகத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.