Our Feeds


Tuesday, April 23, 2024

SHAHNI RAMEES

மோட்டார் வாகன திணைக்களத்தின் போலி முத்திரைகளுடன் இருவர் கைது



 மோட்டார் வாகன திணைக்களத்தின் போலி முத்திரைகள்

மற்றும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தில் ஒட்டப்பட்ட போலி ஸ்டிக்கர்கள் மற்றும் போலி ஆவணங்களுடன் பதுளையில் 43 வயதான சந்தேக நபர் ஒருவரும் 22 வயதுடைய சந்தேக நபரும் இன்று (23) கைது செய்யப்பட்டதாக பதுளை பொலிஸ் சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.




கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் அகரபத்தனை மற்றும் புடலுஓயா பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும், ஆனால் அவர்களின் தேசிய அடையாள அட்டையில் நான்கு பிரதேசங்கள் முகவரிகளாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.




பதுளை, கனுபலெல்ல, தலதாஎல வீதியில் இருவரும் கணவன் மனைவி போல் நடித்து வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, அங்கிருந்து இந்த போலியான உத்தியோகபூர்வ முத்திரைகள் மற்றும் போலி ஆவணங்களை பயன்படுத்தி போலியான ஆவணங்களை வழங்கி போலியான வியாபாரம் நடத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »