ஜெரோம் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தற்காலிகமாக நீக்கியுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் சபைக்கு முன்பாக, பௌத்தம், இஸ்லாம் மற்றும் இந்து மதம் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில், போதகர் பெர்னாண்டோ 2023 டிசம்பரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
பல நாடுகளுக்கு செல்ல வேண்டியதன் அவசியத்தை நீதிமன்றத்திற்கு தெரிவித்தையடுத்து நீதிமன்றம், அந்த கோரிக்கையை கருத்தில் கொண்டு, பிணை நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பயணத்தடையை தற்காலிகமாக நீக்கியது.