கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று வியாழக்கிழமை (11) கல்வி அமைச்சிடம் கையளிக்கப்படும் என இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.
இணையத்தளத்தின் எதிர்கால பாதுகாப்பு தொடர்பான அனைத்து விபரங்களும் அறிக்கையில் உள்ளடங்கியுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள இணைய இணைப்பின் மூலமே கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீதான சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இணையத்தளத்தின் காணப்படும் சில பலவீனம் காரணமாக சைபர் தாக்குதல் நடந்துள்ளதாகவும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான பரிந்துரைகள் குறித்த அறிக்கையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.