தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 779 கைதிகள் அரச பொது மன்னிப்பின் கீழ் விடுதலை பெற உள்ளனர். சிறப்பு பொது மன்னிப்புக்கு தகுதியான 768 கைதிகளும் 11 பெண் கைதிகளும் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
இந்நிலையில், இன்று(13) விடுவிக்கப்படும் கைதிகளின் பட்டியலில், கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்கும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரின் பெயர் இல்லையென தெரிவிக்கப்படுகிறது.
அரச மன்னிப்பின் கீழ் அவரை விடுவிக்க முடியாது என சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.