இலங்கை மின்சார ஊழியர் சங்கம் நாளை (24) பொல்துவ சுற்றுவட்டத்தை சுற்றி நடத்தவிருக்கும்ய ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர்.
வெலிக்கடை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறாக எந்தவொரு வீதியையும் கடக்க வேண்டாம் எனவும், பொல்துவ சுற்றுவட்டத்தை சுற்றி ஆர்ப்பாட்டம் அல்லது வன்முறையில் ஈடுபட வேண்டாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.