துளை மாவட்டத்தின் ஹாலிஎல பிரதேச செயலகப் பிரிவில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசியின் தரம் குறித்து பூரண விசாரணை நடத்தப்படும் என பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன அறிவித்துள்ளார்.
சில அரிசி மூடைகளின் காலாவதி திகதி மாற்றப்பட்டு, அரிசி கட்டியாகி பயன்பாட்டிற்கு தகுதியற்றதாக இருந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இலவசமாக வழங்கப்படும் அரிசியின் தரம் குறித்து மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
இதேவேளை, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படவிருந்த அரிசி கையிருப்பு திருடப்பட்ட சம்பவம் ஒன்று கந்தளாய் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.