ஹரக் கட்டா துபாயில் இருந்த போது தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த உளவுத்துறை பிரதானி தொடர்பில் தெரியவந்துள்ளது.
பத்தொன்பது பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஹரக் கட்டாவுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் விசாரணையை விசேட பொலிஸ் பிரிவுக்கு நியமித்தார். அங்கு பெயரிடப்பட்டுள்ள அதிகாரிகளில் புலனாய்வுத் துறையின் மூத்த அதிகாரியும் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
ஹரக் கட்டாவின் ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொண்டு போதைப்பொருள் வலையமைப்பிற்கு உதவியவர்கள் இருக்கிறார்களா, ஹரக் கட்டாவுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் இருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹரக் கட்டாவின் மாதாந்த சம்பளத்தைப் பெற்ற பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் பற்றிய தகவல்களும் முன்னர் வெளியாகியிருந்தன. விசாரணைகளின் போது, ஹரக் கட்டாவின் உள்ளக விசாரணைகள் தொடர்பில் ஹரக் கட்டாவுக்கு தொடர்ச்சியாக தகவல்களை வழங்கி ஊழல் அதிகாரி ஒருவர் ஹரக் கட்டாவிடமிருந்து நான்கு கோடி ரூபாவை பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஹரக் கட்டாவுக்கு ஆதரவளித்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குறித்தும் தனி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.