வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவல்கள் பிரிவு எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி முதல் பத்தரமுல்லை - சுஹுருபாய நிர்வாக கட்டடத்துக்கு மாற்றப்படவுள்ளது.
குறித்த தினத்திலிருந்து, புதிய அலுவலகத்தில் வழமையான அலுவலக நேரங்களில் சகல தூதரக சேவைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
அதேநேரம், கொழும்பிலுள்ள தூதரக அலுவல்கள் பிரிவினால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுவரும் ஆவண அத்தாட்சிப்படுத்தல் சேவைகள், எதிர்வரும் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தக் காலப்பகுதியினுள் பிராந்திய அலுவலகங்களில் சேவைகளை பெறமுடியுமென வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.