பாகிஸ்தானில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி
செய்ய இலங்கை மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளது.வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதையடுத்து, வெங்காயத்தை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சங்கத்தின் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் அடுத்த வாரத்தில் சந்தையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.