எல்ல – கரந்தகொல்ல – மலித்தகொல்ல பிரதேசத்தில் மண்சரிவு நிலைமை தீவிரமடைந்துள்ளமையினால் எல்ல – வெல்லவாய வீதியும் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சாரதிகள் இது தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியமானது என பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
10 வீடுகளை சேர்ந்த மக்கள் தங்கியிருந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்த பிரிவின் பிரதிப் பணிப்பாளர் எம்.எல். உதய குமார குறிப்பிட்டுள்ளார்.