புகையிரத பராமரிப்பு பணிகளுக்கு கூட கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
புகையிரத சேவை தொடர்ச்சியாக நஷ்டத்தை ஏற்படுத்தி வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
“சமீபத்தில், பேருந்துகள் இல்லாத வீதிகளில் பிள்ளைகள் பாடசாலைகளுக்கும் வைத்தியசாலைக்கும் செல்ல இந்திய கடன் திட்டத்தின் கீழ் 500 பேருந்துகளை இந்தியாவிலிருந்து கடன் வாங்கினேன். கடன் வாங்காவிட்டால், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை வாங்க முடியாது.
60-70 ஆண்டுகள் பழமையான ரயில்கள் உள்ளன, ஆனால் வேறு புதிதாக வாங்க பணம் இல்லை. பணம் இல்லை என்பது ரயில் சேவையில் நஷ்டம். நஷ்டத்தில் இருக்கும் போது, தண்டவாளங்கள் அமைக்க கூட எங்களிடம் பணம் இருக்காது. ரயில்கள் தடம்புரள்வதாக மக்கள் கூறுகின்றனர்.
ஆசிய அபிவிருத்தி வங்கியில் இருந்து 10,000 தடங்கள் கடன் வாங்கப்பட்டு, இப்போது தடம்புரள்வு இடம்பெறும் இடங்களுக்கு மாற்றப்படுகின்றது. அவிசாவளையில் இருந்து கொழும்புக்கு செல்லும் களனி ரயில் பாதையை எப்படியாவது மின்சார ரயில் பாதையாக மாற்ற எமக்கு தெரிந்த அனைத்து முயற்சிகளையும் நானும் பிரதமரும் செய்து வருகிறோம். “ என்றார்.