Our Feeds


Saturday, April 27, 2024

News Editor

பல பகுதிகளில் இன்று வெப்பநிலை அதிகரிக்கும்


 நாட்டின் பல பகுதிகளில் இன்று (27) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதிய அளவு தண்ணீர் அருந்துதல், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுத்தல், வெளியில் கடுமையான உழைப்பைக் கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »