உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை நடத்தியது யார்
என்பது தொடர்பில் நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் வழங்க விரும்பவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (03) மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம வீரசிங்கவிடம் தெரிவித்தார்.
சட்டத்தரணி சந்தீப்த சூரியஆராச்சியின் பிரேரணைக்கு அமைய இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்னவினால் இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவிடம் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதால் மீண்டும் ஒருமுறை வாக்குமூலம் வழங்கத் தேவையில்லையென மைத்ரிபால தெரிவித்துள்ளார்.