மின்சார சபை சீர்திருத்தங்களை உள்ளடக்கிய இலங்கை மின்சாரசபை சட்டமூலம் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் சற்று நேரத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி துறையில் தனியார் துறையின் அதிகப் பங்களிப்பை இந்த சட்டமூலம் வழங்குகிறது.
இந்தச் சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடுவதற்கு தயாராக இருப்பதாக அமைச்சர் விஜேசேகர உறுதியளித்துள்ளார்.