ஈரானின் தெஹ்ரானில் நடைபெறும் EXPO கண்காட்சியில் இலங்கையின் பிரதிநிதியாக விவசாய அமைச்சர் பங்கேற்கவுள்ளதாகவும் ஈரானின் விவசாய அமைச்சரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
ஈரானில் நடைபெறும் EXPO கண்காட்சியில் கலந்து கொள்வதில்லை என முன்னர் தீர்மானித்திருந்த போதிலும், ஈரான் ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க குறித்த கண்காட்சியில் கலந்துகொள்ள தீர்மானித்ததாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.