திருகோணமலையைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே விமான நிலைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர், ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜாவுக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்திருந்தார்.
அவரது பயண ஆவணங்களில் சந்தேகமடைந்து நடத்தப்பட்ட மேலதிக பரிசோதனையில், அவர் போலி ஆவணங்களுடன் செல்ல முயன்றது தெரிய வந்தது.
போலியான இலங்கை கடவுச்சீட்டை இலங்கையில் உள்ள இத்தாலிய தூதரகத்துக்கு அனுப்பி அவர்களிடம் சிக்காமல் இத்தாலிய வதிவிட விசாவை இவர் பெற்றுக்கொண்டமை தெரிய வந்துள்ளது.
இந்த போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இத்தாலிக்குள் நுழைந்தவுடன் இந்த ஏற்பாடுகளை செய்த தரகருக்கு 95 இலட்சம் ரூபா பணம் தருவதாக உறுதியளித்ததன் பேரில், தான் இந்த விமானப் பயணத்தை திட்டமிட்டதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார்.