மதுரட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரட்ட தம்பஹா கெடஹென
பகுதியில் வீட்டுத் தோட்டத்தில் உள்ள பலாமரத்தில் பலாக்காய் பறிப்பதற்காக ஏறிய முதியவர் மரத்திலிருந்து தவறி விழுந்து ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (27) மாலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த முதியவர் 64 வயதுடைய பொல்வத்தகே கோஷித என்பவராவார்.