மைத்ரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை
வகிப்பதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று மற்றுமொரு தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி அக்கட்சியின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் மொன்டேக் சரத் சந்திரா தாக்கல் செய்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் இவ்வாறு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டதன் பின்னர் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டமை சட்டவிரோதமானது எனக் கூறி அவர் இந்த முறைப்பாட்டை தாக்கல் செய்திருந்தார்.