நிர்ணய விலையை மீறி அரிசி, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்களை விற்பனை செய்பவர்களை கண்டறிவதற்காக 7,500க்கும் அதிகமான விசேட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 7,662 சோதனை நடவடிக்கைகள் முன்னெக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நிர்ணய விலையை மீறி பொருட்களை விற்பனை செய்தவர்கள் தொடர்பில், கடந்த 10 நாட்களில் மாத்திரம் 725 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக விசேட சோதனை மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சஞ்சய இரசிங்க அறிவித்துள்ளார்.