தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தை முன்னிட்டு நடத்தப்படும் பேருந்து சேவையின் ஊடாக இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் சுமார் 25 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது.
புத்தாண்டுக்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக கடந்த 5ஆம் திகதி முதல் சுமார் 200 மேலதிக பேருந்துகளை இயக்குவதற்குச் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.
இதன்படி, இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் சுமார் 25 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது.
இதேவேளை, நெடுஞ்சாலைகளின் வருமானம் நேற்று 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இன்றும் 15ம் திகதிக்கும் இடையில் நெடுஞ்சாலைகளின் வருமானம் கணிசமான அளவு உயர்வாகவும் சாத்தியமாகுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.