ஆசிரியர் அதிபர்கள் சங்கத்தின் அழைப்பாளர் வணக்கத்திற்குரிய
உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.நீதிமன்ற உத்தரவின் பேரில் பல குடிசை வீடுகளை அகற்றுவதற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அளுத்கடை நீதவான் நீதிமன்ற இலக்கம் 03 இல் இன்று (22) இடம்பெற்ற இது தொடர்பான வழக்கு விசாரணையில் வணக்கத்திற்குரிய உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட சந்தேக நபர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
அங்கு அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.