கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை(24) புதன்கிழமை 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நாளை (24) காலை 8.30 தொடக்கம் இரவு 8.30 வரை நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
பேலியகொடை, வத்தளை, கந்தானை, ஜா-எல, கட்டுநாயக்க – சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், களனி, மஹர, தொம்பே ஆகிய இடங்களிலும் மினுவாங்கொடை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.