அக்கட்சியினர் மற்றும் உழைக்கும் மக்களுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சி உலக தொழிலாளர் தினத்தில் மக்களின் சக்தியை நாட்டுக்கு காண்பிக்கும் என ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ரவி கருணாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறுகிய அரசியல் மற்றும் அதிகார நோக்கங்களுக்காக காளான்கள் போல் உருவாகும் அரசியல் கூட்டணிகளினால் நாட்டுக்கும் மக்களுக்கும் எந்த நன்மையும் இல்லை எனவும் இவ்வாறான அரசியல் கூட்டணிகள் உருவாகும் வேகத்தை விட வேகமாக சரிந்து வருவதாகவும் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி எப்பொழுதெல்லாம் பலமாகவும், அதிகாரத்துடனும் இருந்ததோ அப்போதெல்லாம் நாடு அபிவிருத்தியடைந்தது என்றும் அந்தக் கட்சி பலவீனமான போதெல்லாம் நாடு வங்குரோத்து நிலைக்குச் சென்றதாகவும் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்தார்.