தொலஸ்பாகயில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த
பஸ் ஒன்று வீதிக்கு அருகில் இருந்த மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணித்த 3 பாடசாலை மாணவர்கள், 5 பயணிகள் மற்றும் பஸ் சாரதி ஆகியோர் காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று (09) காலை 6.45 மணி அளவில் நாவலப்பிட்டி, உடுவெல்ல பிரதேசத்தில் தொலஸ்பாக பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பஸ் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் செங்குத்தான பாறை உள்ளதாகவும், பஸ் சாரதி அந்த குன்றின் மீது பஸ் கவிழ்ந்து விடாமல் தடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது பஸ்ஸில் பாடசாலை மாணவர்கள் உட்பட 50 பேர் பயணம் செய்துள்ளனர்.