தாய்வான் தீவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 7இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் , 736இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது 25 ஆண்டுகளுக்குப்பின் ஏற்பட்டுள்ள இச்சக்திவாய்ந்த நிலநடுக்கம் 7.4 ரிக்டர் அளவில் 7.4ஆக பதிவாகியுள்ளது.
தலைநகர் தைபே மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியதால், நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள ஹுவாலியன் கவுண்டியில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்வானுக்கு ஜப்பானும் சீனாவும் உதவ முன்வந்துள்ளன தாய்வான் இராணுவம் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் என்று ஜனாதிபதி சாய் இங்-வென் தெரிவித்துள்ளார்.