69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற கேடுகெட்ட முறைக்கு எதிராகப் போராடிய பெண் என சந்தேகநபர் தமிதா அபேரத்ன நேற்று (04) ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றைய தினம் (04) கைது செய்யப்பட்ட பிரபல நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரும் இன்று (05) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இந்த நிதி மோசடி சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சந்தேகநபர் தமிதா அபேரத்னவையும் அவரது கணவரையும் நேற்று (04) காலை கோட்டை நீதிமன்றத்திற்கு வந்த போதே கைது செய்துள்ளனர்.
பின்னர், வாக்குமூலத்தைப் பெறுவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நிதி மோசடி சம்பவம் தொடர்பில் தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட உள்ளதால், அவர்களை நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியவில்லை என குற்றப் புலனாய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
கொரியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒருவரிடமிருந்து மூன்று இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டு அந்தத் தொகையை மோசடி செய்ததாக எழுந்த முறைப்பாட்டின் அடிப்படையில் தமிதா அபேரத்னவும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.