ஐ.பி.எல் தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ரோய்ல்ஸ் அணி மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 125 ஓட்டங்களை எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் சாஹல், டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி முதல் 3 விக்கெட்டுகளை உடனே இழந்தாலும் மத்தியில் களமிறங்கிய பராக் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அதிரடியாக விளையாடிய பராக் அரை சதம் விளாசினார்.
இறுதியில் ராஜஸ்தான் அணி 15.3 ஓவர்களில் 127 ஓட்டங்களை எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் ஆகாஷ் மத்வால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.