வடகிழக்கு ஆபிரிக்க நாடான டிஜிபௌட்டி(Djibouti) கடற்பகுதியில்
அகதிகள் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 38 போ் உயிரிழந்ததாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.எத்தியோப்பியா, சோமாலியா போன்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆபிரிக்க நாடுகளிலிருந்து வளைகுடா நாடுகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக அகதிகள் யேமனை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது குறித்த படகு விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துப் பகுதியிலிருந்து 22 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். மேலும், இந்த விபத்தில் மாயமான 6 அகதிகளை மீட்புக் குழுவினா் தேடி வருவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.