நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக
குடிநீரின்றி 2927 குடும்பங்களைச் சேர்ந்த 9866 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.கம்பஹா மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 2351 குடும்பங்களைச் சேர்ந்த 7053 பேர் குடிநீரின்றி வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனரென அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக கேகாலை மாவட்டத்தில் 576 குடும்பங்களைச் சேர்ந்த 2813 பேர் குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
வரகாபொல, ருவன்வெல்ல, யட்டியந்தோட்டை, தெரணியகல, தெஹியோவிட்ட மற்றும் கலிகமுவ பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் குழு என அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.