முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட
மூவருக்கு எதிராக கையூட்டல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 29ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க உத்தரவிட்டுள்ளார்.இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இன்று(04) அழைக்கப்பட்டது.
2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான சுமார் பத்து இலட்சம் ரூபாவை அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்டோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.