இரண்டு வன்முறை கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 22 பேர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள், அவர்களுடன் உதவிக்கு வந்தவர்கள், வைத்தியசாலையினுள்ளும் மோதலில் ஈடுபடவும் முயன்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.