கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று (07) இடம்பெற்ற “என்னில் இருந்து ஆரம்பிப்போம்” கண்டி மாவட்ட இளைஞர் மாநாட்டில் இளைஞர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு ஜனாதிபதி பதில் அளித்துள்ளார்.
அஸ்வெசும நிவாரணங்களை வழங்குவதில் குறைபாடுகள் உள்ளன. அனைத்து ஏழை குடும்பங்களும் இதன்பயன் கிடைக்கவேண்டும் என இளைஞர் ஒருவர் கேட்ட கேள்விக்கு..
அந்த குறைபாடுகளை போக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக இந்த நன்மையை வழங்குவதற்கு சில தகுதிகள் அவசியம். இந்த திட்டம் 2025இல் டிஜிட்டல்மயப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 24 இலட்சம் பேருக்கு இந்த பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் அனைத்து ஏழை மக்களுக்கும் நிவாரணம் வழங்குவதற்காக அஸ்வெசும திட்டம் ஆரம்பிக்கப்பட்டது என ஜனாதிபதி பதில் அளித்துள்ளார்.