இன்று நாம் சகோதரத்துவத்துடன் வாழ்வதற்காக 2015 ஆம் ஆண்டு தமிழில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று தீர்மானித்தவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என, அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
நாட்டில் தமிழ் மொழி பேசும் அனைத்து மக்களுக்கும் கௌரவம் அளிக்கும் வகையில் சுமார் 9 வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழில் தேசிய கீதம் பாடும் வாய்ப்பை ஏற்படுத்தியதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று எமது இளைஞர், யுவதிகளுக்கான தொழிற்படையைக் கட்டியெழுப்புவதற்கும் பயிற்சிகளை வழங்குவதற்கும் ஜனாதிபதி ஒன்றரை பில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கி உள்ளார்.
எனவே இதன் மூலம் தொழிற்பாயிற்ச்சிகளை பெற்று சிறந்த தொழில்வாய்ப்புகளை உலகளாவிய ரீதியில் பெறவேண்டும்.
அதன் மூலம் கிடைக்கும் வருமானம் நாட்டிற்கு வரும்போது பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்” என்று அமைச்சர் கூறினார்.