இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், இலங்கையில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக டெங்கு நுளம்புகளின் பரவல் குறைவடைந்துள்ள நிலையில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையும் 22.8 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் 8 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், ஜனவரி மாதத்தில் 10,417 நோயாளிகளும் பெப்ரவரி மாதத்தில் 6,007 நோயாளிகளும் மார்ச் மாதத்தில் 3,615 நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மேல் மாகாணத்தில் 7,211 நோயாளிகளும் கிழக்கு மாகாணத்தில் 4,215 நோயாளிகளும் மத்திய மாகாணத்தில் 1,585 நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதி, கெஸ்பேவ, கடுவலை, மஹரகமை, பியகம, கம்பஹா, வத்தளை, குருணாகல், சாவகச்சேரி ஆகிய பிரதேசங்கள் டெங்கு அபாயம் காணப்படும் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.