கொழும்பின் பல பகுதிகளில் இன்று(27) மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை14 மணித்தியால நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு 5, 6, தெஹிவளை-கல்கிசை மற்றும் மொரட்டுவை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும், ஜயந்திபுர, பெலவத்த பிரதேசங்களிலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தப் பணிகள் காரணமாக நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.