ஒரு கிலோ எலுமிச்சம் பழத்தின் விலை 1200 ரூபா வரை உயர்ந்துள்ளது.
தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (21) ஒரு கிலோ எலுமிச்சம் பழத்தின் 1000 ரூபா தொடக்கம் 1200 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
கடந்த சில வாரங்களுக்கு முன், ஒரு கிலோ எலுமிச்சம் பழத்தின் விலை, 100 ரூபாய்க்கும் குறைவாக இருந்ததுடன், நிலவும் வறண்ட காலநிலையால், பானங்கள் தயாரிப்பதற்கான எலுமிச்சம் பழத்தின் தேவை அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.