ஆஸ்திரேலியாவின் டன்ஸ்பாராக்கில் உள்ள கடற்கரையில் நேற்று
திடீரென கூட்டம் கூட்டமாக அரிய வகை திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.சுமார் 160க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய நிலையில், அவற்றில் பல உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கடலில் வாழும் உயிரினங்களில் மிகவும் முக்கியமான இராட்சத பாலூட்டி இனம் என்றால் அது திமிங்கலங்கள் தான். உலகில் உள்ள விலங்குகளில் மிகப் பெரியது இதுதான். நீரில் வாழும் திமிங்கலத்தில் நீலத் திமிங்கலம் என்பது தான் மிகப் பெரியது ஆகும்.
இதனால் திமிங்கலங்களை உயிருடன் மீட்கும் முயற்சியில் வன ஆர்வலர்கள் இறங்கினார்கள்.பலமணி நேர போராட்டத்திற்கு பின்னர் சுமார் 100-க்கும் மேற்பட்ட திமிங்கலங்களை படகு மூலம் ஆழ்கடலுக்கு இழுத்து சென்று விட்டார்கள்.
ஆனால் 26-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் செத்து மிதந்தன.இதனால் அவற்றை அங்குள்ள மணல்பரப்பில் தோண்டி புதைத்தனர்.
ஒரு திமிங்கலம் கரையில் தவறுதலாக மாட்டிக் கொண்ட நிலையில் அடுத்தடுத்து திமிங்கலம் வரிசையாக கரையில் சிக்கி இருக்கலாம் என அந்நாட்டில் கடல்வாழ் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.