2024 ஆம் ஆண்டில் முதல் 3 மாதங்களில் 74,499 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 39,900 பேர் ஆண் தொழிலாளர்கள் என்பதுடன் 34,599 பேர் பெண் தொழிலாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான இலங்கையர்கள் குவைத் நாட்டிற்கு தொழிலுக்காகச் சென்றுள்ளனர் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வேலை நிமித்தம் வெளிநாடு சென்ற இலங்கையர்கள் இந்த வருடத்தின் முதல் 2 மாதங்களில் மாத்திரம் 963.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.