க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 3,370,000 மாணவர்களில் 50,000 மாணவர்களுக்கு ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வழிகாட்டல் ஆகியவற்றில் பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அத்தோடு க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை 7 ஆகக் குறைப்பதற்குத் தீர்மானித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.